பிரச்னையை சுமுகமாக தீர்க்க இந்தியா முன்வந்துள்ளது - சீனா
16:22 June 17
டெல்லி: பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள இந்தியா முன்வந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளாத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, பதற்றத்தை தணிக்கும் நோக்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள இந்தியா முன்வந்துள்ளதாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். மேலும், மோதலுக்கு காரணமாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.