தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய ராணுவத்தினரை சீனா அத்துமீறி தடுத்து நிறுத்தியது - வெளியுறவுத் துறை

டெல்லி : சீனா-இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவப் படையினரை, சீனா அத்துமீறி தடுத்து நிறுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MEA
MEA

By

Published : May 22, 2020, 2:10 AM IST

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிக்கிம் செக்டாரில் இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டைத்தாண்டி இந்தியப் படையினர் அத்துமீறல் வேலையில் ஈடுபட்டதாகச் சீன தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அப்படி ஏதும் நடக்கவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடைப்பிடிப்பது குறித்து இந்தியப் படையினருக்கு நன்றாகவே தெரியும்.

உண்மையில், இந்திய எல்லைக்குட்பட்டப் பகுதியில், நம் பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்த போது, சீன தரப்பு தான் தடுத்து நிறுத்தி, அத்துமீறலில் ஈடுபட்டது.

எல்லைப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா எப்போதுமே பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் அதன் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில், இந்தியா மிகவும் உறுதியாக உள்ளது.

எல்லைப் பிரச்னைகளை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இருநாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" எனத் தெரித்தார்.

இதையும் படிங்க :மாறிவரும் இந்தியாவின் ஆஃப்கானிய கொள்கை!

ABOUT THE AUTHOR

...view details