இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த ஒரு மாதமாக சீனா தனது ராணுவத்தை குவித்துவந்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் எல்லையில் போர் பதற்றம் உருவானது. அதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களுக்கிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் இருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர், சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், 10 ராணுவ வீரர்களை சீனா கைது செய்தது.