தலைப்பு முதல் செய்தி முழுவதும் திருத்தி தேவையில்லாத பத்திகளை நீக்கி எழுத்துப் பிழையின்றி அனுப்பவும்
கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போரை சாதகமாக்கி தனது சுயநலத்துக்காக இந்தியா மற்றும் மற்ற நாடுகளை சீனா துன்புறுத்தி வருகிறது.
அண்மையில் இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் என்பது கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தையும் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பிரச்சினைகளையும் தனக்கு சாதகமாக்கி கொள்வதற்காக சீன அரசாங்கத்தின் கவனமாக கணிக்கப்பட்ட நடவடிக்கை என்றும், அதன் எல்லையில் உள்ள தற்போதைய நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கை என்றும் ராணுவம் மற்றும் போர் தந்திர நிபுணர்கள் நம்புகின்றனர்.
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1962 குளிர்காலத்தில், கியூபாவில் சோவியத் யூனியன் தனது ஏவுகணைகளை நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரு வல்லரசுகளுக்கு இடையே ஏற்பட்ட அணுசக்தி தொடர்பான நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கிய சீன தந்திரத்தின் ஒரு தெளிவான நினைவூட்டல் இது.
பல ஆண்டுகளாக இரு வல்லரசுகளுக்கிடையில் ஒரு பிரச்சினையாக இருந்த கியூபா ஏவுகணை விவகாரம், 1962 ஆம் ஆண்டில் அக்டோபர் 16 அன்று முழுமையாக வெடித்தது.
அதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தியது தொடர்பாக வல்லரசுகள் – அமெரிக்காவும் மற்றும் முந்தைய சோவியத் யூனியனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருந்த நெருக்கடியில், இந்தியா-சீனா போரில் தலையிடும் நிலையில் இல்லாதபோது அக்டோபர் 20, 1962 அன்று சீனா இந்தியாவைத் தாக்கியது..
அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி அக்டோபர் 22, 1962 அன்று கியூபாவை அமெரிக்க கடற்படை முற்றுகையிட உத்தரவிட்டார். இரு நாடுகளுக்கிடையில் தீவிரமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 1962 நவம்பர் 21 அன்று அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
அதே நேரத்தில் 1962 அக்டோபர் 20-ம் தேதி சீனா இந்தியாவுக்கு எதிரான போரைத் தொடங்கி, அதன் இராணுவ நோக்கங்களை அடைந்த பின்னர் 1962 நவம்பரில் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தது.
சீனப் பிரதமர் சூ என்லாய் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அக்டோபர் 19, 1962 அன்று அறிவித்தார், இது 1962 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது, அமெரிக்காவின் கியூபா கடற்படை முற்றுகையும் முறையாக முடிவுக்கு வந்தது.
“போர் தொடுக்கப்பட்ட காலம் மிகவும் முக்கியமானது. ஊடுருவல், நிலைப்பாடு மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புகள் இவை அனைத்தும் தற்செயலானவையும் அல்ல, இது ஒரு சாதாரண விஷயமுமல்ல” என்று ஷாங்காயில் இந்தியாவின் துணைத் தூதராக இருந்த புது தில்லியைச் சேர்ந்த முன்னாள் தூதர் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.
"கால அளவு, போர் தொடுக்கப்பட்ட நேரம் மற்றும் பல காரணிகளால் இது நன்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும். உயர்மட்ட அதிகார மையத்தின் அனுமதியின்றி இது நிச்சயமாக நடந்திருக்காது” என்று தூதர் விஷ்ணு பிரகாஷ் ஈடிவி பாரத்திடம் கூறினார்.
தென் கொரியாவிற்கான இந்தியாவின் தூதராகவும், கனடாவுக்கான தூதரக உயர் அதிகாரியாகவும் இருந்த இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் சீனா நடத்திய அத்துமீறல்களை சுட்டிக்காட்டுகிறார்.
“ஒவ்வொரு நாடும் ஏதாவது திட்டமிடும்போது அதற்கான தகுந்த காலத்தை பார்க்கும், சீனர்கள் கோவிட்-19 நெருக்கடியை ஒரு சரியான நேரமாக பார்த்தார்கள்” என்று இந்திய இராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தில் கமாண்டிங் ஆபிசராக லடாக் பிராந்தியத்தில் நாட்டின் சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) தீபேந்திர சிங் ஹூடா கூறினார்
"அனைத்து நாடோளும் எதையாவது திட்டமிடும்போதெல்லாம் அதனை செயல்படுத்துவதற்கான சாதகமான நேரத்தைப் பார்ப்பார்கள், இது ஒரு பெரிய குறிப்பிடத்தக்க நடவடிக்கை, எனவே அவர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச நிலைமைகள் என்ன என்பதை அவர்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பார்கள்" என்று டி.எஸ். ஹூடா ஈடிவி பாரத்திடம் கூறினார்.
"கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஈடுபட்டுள்ளதை அவர்கள் கண்டார்கள், எனவே இது ஒரு சந்தர்ப்ப தருணம் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்" என்று ஜெனரல் ஹூடா மேலும் கூறினார்.
இந்தியாவின் முன்னணி சிந்தனைக் குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் புகழ்பெற்ற அணு மற்றும் விண்வெளி கொள்கை முன்முயற்சியின் தலைவரான டாக்டர் ராஜேஸ்வரி ராஜகோபாலன் கூறுகையில், கடந்த 5-6 ஆண்டுகளில் சீனா தனது இராணுவ மற்றும் உத்தி திறன்களை வளர்த்து வருகிறது. அதன் அண்டை நாடுகளுடன் எல்லைகளை மாற்றுவதற்கான சந்தர்பத்தை எதிர்பார்க்கிறது.
"நிச்சயமாக அவர்கள் இதைத் திட்டமிட்டே செய்துள்ளனர், இது ஒரே இரவில் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல" என்று ராஜேஸ்வரி ராஜகோபாலன் ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்.