இந்திய, சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்தியாவுடனான எல்லை பகுதியில் 20,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது.
இதனை தவிர்த்து சிஞ்சியாங் பகுதியில் 10,000 முதல் 12,000 வீரர்களை ராணுவ வாகனங்கள், பயங்கர ஆயுதங்களுடன் சீனா குவித்துவருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய எல்லை பகுதியை அடையும் நோக்கில் சீனா தொடர் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.
கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தட்டையான நிலப்பரப்பு என்பதால் 48 மணி நேரத்தில் சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் நுழைந்துவிடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவின் ஆதிக்க நடவடிக்கையால் சர்வதேச புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்