சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுநோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 170ஆக அதிகரித்துள்ளது. இதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஆயிரத்து 370 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், நிமோனியா வைரஸால் ஏழாயிரத்து 711 பாதிப்படைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் கடந்த டிசம்பர் மாதத்தில் மெள்ள மெள்ள நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் கரோனா வைரஸ் மக்களை மிகக் கொடூரமாகக் கொலைசெய்யும் அரக்கனைப் போன்றுள்ளதாகக் கடந்த செவ்வாயன்று அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். மேலும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தங்களது அரசு தீவிர முனைப்பில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார்.