இந்திய, சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு ஆபத்தான நாடு சீனா என்றும், பேச்சுவார்த்தை மூலம் சர்வதேச அழுத்தத்தை அந்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.
சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தாளான சாம்னாவிற்கு அவர் அளித்த பேட்டியில், "சீனாவின் ராணுவம் இந்திய ராணுவத்தை விட 10 மடங்கு வலிமை வாய்ந்தது. அண்டை நாடுகளை சீன தன் பக்கம் இழுத்துள்ளது. ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தையின் மூலம் அந்நாட்டின் மீது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.