தமிழ்நாடு

tamil nadu

சூரிய கிரகணம்... மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்

By

Published : Dec 26, 2019, 5:46 PM IST

Updated : Dec 26, 2019, 6:27 PM IST

பெங்களூரு: சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Children were buried in the pit during the time of Solar eclipse
Children were buried in the pit during the time of Solar eclipse

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை கங்கன சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தஜதன்ஸ்புரா கிராமத்தில் சிலர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில், கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற நம்பிக்கைகள் வாயிலாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாது எனவும் அறிவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

Last Updated : Dec 26, 2019, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details