கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிளாளிகள் பலர் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதற்காக கரோனா நிவாரண நிதி உதவி புதுச்சேரியில் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் 300 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனை நாராயணசாமியே தெளிவுபடுத்தியிருந்தார்.