குழந்தைகள் கடத்தல்
இது தொடர்பாக அஸ்ஸாம் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய (ஏ.எஸ்.சி.பி.சி.ஆர்) தலைவர் சுனிதா சாங்ககட்டி (unita Changkakati) கூறியதாவது:
அஸ்ஸாமில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக நடப்பாண்டில் மட்டும் 125 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நவம்பரில் 17 குழந்தைகள் கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 11ஆக இருந்தது. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான மற்ற குற்றங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.
அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் மற்ற குற்ற நிலவரம்:
இதேபோல் குழந்தைகளுக்கு (சிறுவர்-சிறுமியர்) எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்துள்ளன. 2018ஆம் ஆண்டு இந்தக் குற்றங்கள் 43 ஆக இருந்தது. தற்போது அது 53ஆக அதிகரித்துள்ளது. மனதுக்கு ஆறுதல் தரும்வகையில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது.