கர்நாடாகா மாநிலம், பெங்களூரு அருகே அரகிரே என்ற பகுதியில் கடந்த வாரம், அஸ்ஸாமைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு 16 வயது சிறுவனை குழந்தைத் திருமணம் செய்துவைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று, புத்தனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தது.
அந்தப் புகாரின் பேரில், குழந்தைகள் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்தச் சிறுவனின் வீட்டுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், உண்மை தெரியவர தம்பதிகளைப் பிரித்து, சிறுவனின் பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.