புதுச்சேரி சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே என்.ஆர். காங்கிரஸின் கதிர்காமம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜே ஜெயபாலுக்கு கடந்த 24 ஆம் தேதி கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மரத்தடியில் பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. ஆளுநர் உரை நிகழ்ந்த அன்று கூட்டத்தில் ஜெயபாலும் கலந்து கொண்டதால், முதலமைச்சர், அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள், அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் அறிவித்திருந்தார்.
புதுச்சேரி முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை - கரோனா
புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 126 பேருக்கு நேற்று (ஜூலை 27) கரோனா சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்றைய சோதனையின் முடிவுகளை மாநில சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது. அதில், கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உயிரிழப்பு!