தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களை சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி: நெல்லிதோப்பு தொகுதி மக்களை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Jul 8, 2020, 4:11 PM IST

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட கட்டுபடுத்தபட்ட பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி, தனது தொகுதியான நெல்லிதோப்பு பகுதியை நேரில் பார்வையிட்டார்.

நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட வெண்ணிலா நகர், ஜேவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் கரோனா நோய் தொற்று பரவி உள்ளதால் அந்த பகுதியில் உள்ள மக்களை நாராயணசாமி நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர்களுக்கு அரிசி, காய்கறிகள், நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகளை நாராயணசாமி வழங்கினார். இந்த சந்திப்பில் சட்டப் பேரவை உறுப்பினர் ஜான்குமார் உடன் இருந்தார்.

முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details