இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், “கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் அரசியல் கட்சிகளும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுத்தர பிரதமருக்கு நாராயணசாமி கடிதம் - நாராயணசாமி
புதுச்சேரி: மாநில அரசின் நிதி குறைந்து வருவதால் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்கித் தர பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
cm
மாநில வருவாய் கடந்த சில மாதங்களாக 60 விழுக்காடாக உள்ளது. எனவே, இந்த நிதியை வைத்துக்கொண்டு மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது. இதனால் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். தற்போது நிதியளவு குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற்றுத்தர வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிஎம் கேர்ஸ் நிதியில் குவியும் பணம்: கேள்விக்கணைகளால் துளைக்கும் ப. சிதம்பரம்