புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி முதலமைச்சருக்கு கரோனா பரிசோதனை! - Corona examination for mp's
புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மற்ற அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் அறிவித்திருந்தார். இதனிடையே, சட்டப்பேரவை காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தின் ஒரு பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி ஆகியோருக்கு இன்று (ஜூலை 27) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சையில் இருந்த மூதாட்டி தப்பியோட்டம்