மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்த நாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் பிறந்த நாள்: முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை - முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்
புதுச்சேரி: எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் பிறந்த நாள்
இதைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.