புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பரப்புரை மேற்கொண்டார். அமைச்சர்களுடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
இதற்கு முன்னதாக சாரம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு பரப்புரையைத் தொடங்கினார்.
சாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி இதேபோல் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, கட்சி நிர்வாகிகளுடன் தென்றல் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.