புதுச்சேரி மாநிலத்தில் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனாம் தொகுதி எம்எல்ஏவும், சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவுக்கு பாராட்டு விழா அரசு சார்பில் இன்று (ஜன.6) மாலை நடக்கிறது.
இவ்விழாவில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் ஏனாம் சென்றுள்ளனர். இந்நிலையில், ஏனாம் பிராந்தியம் தரியல் திப்பா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடம், புறக்காவல் நிலையம், சமையல் கூட அரங்கு ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.