தமிழ்நாடு

tamil nadu

’தகுந்த இடைவெளியை பின்பற்றாவிட்டால் கடைகள் இடம் மாற்றப்படும்’ - புதுச்சேரி முதலமைச்சர் எச்சரிக்கை

By

Published : Jun 11, 2020, 5:06 PM IST

புதுச்சேரி : காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, தகுந்த இடைவெளியை பின்பற்றாவிடில் கடைகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்படும் என எச்சரித்தார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

புதுச்சேரியில் தற்போதுவரை 157 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 88 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பழைய இடத்தில் இயங்கிவரும் பெரிய மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்தன.

தகவலறிந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காந்தி வீதியில் அமைந்துள்ள குபேர் மார்க்கெட் என்கிற பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சந்தைகளில் பணிபுரியும் வியாபாரிகள், முகக்கவசங்கள் அணிந்து தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை முறையாகக் கடைபிடிக்கவில்லை எனில், மார்க்கெட் மீண்டும் இடமாற்றம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து வியாபாரிகளும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தருமாறு கோரிக்கைளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க:'கரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை' - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details