தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்: முதலமைச்சர் நாராயணசாமி - 10 thousand beds ready in Pondicherry

புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

By

Published : Jul 28, 2020, 9:05 PM IST

புதுச்சேரி கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "புதுச்சேரியில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைக்காக காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கோவிட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்
தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தினசரி 700 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதலாக 10 ஆயிரம் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றது. கரோனா சிகிச்சைக்காக பரிசோதனை கருவிகள், வென்ட்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள், வியாபாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கரோனாவை ஒழிக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details