பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன். கடந்த வாரம் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், புதுச்சேரி வைத்திக்குப்பம் சுடுகாட்டில் பாவேந்தர் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மன்னர் மன்னன் நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி காந்தி நகரில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, மன்னர் மன்னனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.