தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கிறது - ப. சிதம்பரம் - இந்தியப் பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கிறது

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்

chidambaram

By

Published : Sep 11, 2019, 2:08 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பத்திரிக்கையாளர்களிடம் ஐந்து விழுக்காடு வளர்ச்சி என்று இந்தியப் பொருளாதாரத்தை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்கில், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர் கடந்த சில நாட்களாக ஏழைகளிடம் உரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாகவும் நீதியையும் அநீதியையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஏழைகளின் திறனைக் கண்டு வியப்படைவதாகவும் கூறியுள்ளார்.

ப. சிதம்பரம் ட்வீட்

மேலும், "நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கிறது. இதில் ஏழைகளே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். குறைந்த வருமானம், குறைவான வேலைவாய்ப்பு, வர்த்தகத்தில் சரிவு, குறைந்துள்ள முதலீடுகளால் ஏழை எளிய மக்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வழி என்ன?" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ப. சிதம்பரம் ட்வீட்

ப. சிதம்பரம் திகார் சிறையிலிருக்கும் நிலையில், அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் குடும்பத்தினர் ட்வீட் செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details