தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘தேர்தல் ஆணையம் இந்திய மக்களை தோல்வியடையச் செய்துள்ளது’ - ப.சிதம்பரம் வேதனை! - chidambaram

டெல்லி: விதிகளை மீறி பாஜக செயல்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து இந்திய மக்களை தோல்வியடையச் செய்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்

By

Published : Apr 29, 2019, 9:16 AM IST

காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பாஜக பல தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டது. அளவுக்கு அதிகமாக தேர்தலில் பாஜகபணம் செலவு செய்தபோதும், மதவாத கருத்துகளை அதன் தலைவர்கள் பேசியபோதும் அதனை தடுக்காமல் தேர்தல் ஆணையம் இந்திய மக்களை தோல்வியடைச் செய்துள்ளது.

பாஜக அதன் தோல்விகளை மறைக்க தேசியவாதத்தை கையில் எடுத்திருக்கிறது. அனைத்து இந்தியர்களும் தேசியவாதிகள்தான். ஊடகத்தை கையில் வைத்துக்கொண்டு தேசியவாதத்தை மக்களுக்கு பாஜக தவறாக சித்தரிக்கிறது. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பத்திரகையாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் பாஜக ஆட்சியில் அச்சத்தில் உள்ளனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details