கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதியன்று இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் 43 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதனால் இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.
பேசும் படங்கள்... வீரர்களை நலம் விசாரித்த மோடி - மன்மோகன் சிங்கை ஒப்பிட்ட ப. சிதம்பரம்
புதுடெல்லி: காயமடைந்த ராணுவ வீரர்களைச் சந்திக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு ப.ம் சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த வீரர்களிடம் நலம் விசாரிக்க பிரதமர் மோடி ஜூலை 3ஆம் தேதி லடாக்கிற்குத் திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு உயர் ராணுவ அலுவலர்களைச் சந்தித்து, நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், விமானப் படையினர், இந்தோ-திபெத் எல்லை (ITBP) காவலர்கள் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்துப் பேசினார். மேலும், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.