தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உபா சட்டம் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ரத்து செய்யப்படும்; ப.சிதம்பரம் - அமித்ஷா காரசார விவாதம்

டெல்லி: சட்டவிரோத செயல்பாடு தடுப்பு மசோதா குறித்து மாநிலங்களவையில் ப. சிதம்பரம் - அமித்ஷா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அமித்ஷா- ப.சிதம்பரம்

By

Published : Aug 3, 2019, 12:23 AM IST

Updated : Aug 3, 2019, 7:12 AM IST

சட்டவிரோத செயல்பாடு தடுப்பு மசோதா (உபா) மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. மசோதாவுக்கு 147 பேர் ஆதரவாகவும் 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இந்த மசோதாவை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தச் சட்டம் தனிநபரை பயங்கரவாதி என்று அடையாளப்படுத்த மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. ஒரு அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்று சொல்வதற்கும் ஒரு தனிநபரை பயங்கரவாதி என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

இச்சட்டத்தின் மூலம் அரசு யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி என முத்திரை குத்தி சிறையிலடைக்க முடியும். இது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது. தனிநபரை பயங்கரவாதி என்று சொல்லும் இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீதிமன்றத்தின் வாயிலாக உபா சட்டம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும்” என்று கூறி கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்.

இதற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா, ”உபா சட்டத் திருத்தத்தினால் எந்தவொரு தனிநபரின் உரிமையும் பறிக்கப்படாது. எமர்ஜென்சியின்போது நாட்டில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியினர் சட்டத்தைத் துஷ்பிரயோகத்தைப் பற்றிப் பேசாதீர்கள். தனிநபர்களை பயங்கரவாதி என அறிவிக்காவிட்டால் அவர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்ததச் சட்டத் திருத்தம் மிக அவசியமானது” என விளக்கம் அளித்துள்ளார்.

Last Updated : Aug 3, 2019, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details