தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லை விவகாரத்தில் பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? - ப. சிதம்பரம் கேள்வி - Congress Senior leader P Chidamabarm tweet

டெல்லி : சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி ஏழு வாரங்களாகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன் எனக் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

Chidambaram questions PM
Chidambaram questions PM

By

Published : Jun 17, 2020, 10:16 AM IST

Updated : Jun 17, 2020, 4:06 PM IST

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஏழு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை.

இதுபோன்று வாய்திறக்காத பிரதமரோ குடியரசுத் தலைவரோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?

இந்தியப் படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள், அவர்கள் பெயர்கள் என்ன, எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? என எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?" எனப் பதிவிட்டுள்ளார்.

லடாக் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், இருதரப்பு ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபட்டதில் இந்தியப் படையைச் சேர்ந்த 20 ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர்.

இதையும் படிங்க : 'இந்தியா அத்துமீறி தாக்குதல்' - சீனா குற்றச்சாட்டு

Last Updated : Jun 17, 2020, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details