தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தியாவுக்கு தேவையானது அடிப்படை பொருளாதார மாற்றங்கள்' - சிதம்பரம்

டெல்லி: இந்தியாவுக்கு தேவையான சீர்திருத்தங்கள் 2019-20ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சிதம்பரம்

By

Published : Jul 9, 2019, 10:22 AM IST

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் காலத்தில் அறிவித்த சீர்திருத்தங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவுக்கு தேவையான அடிப்படை சீர்திருத்தங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கவில்லை.

இந்தியாவுக்கு தேவையானது தீவிர மாற்றங்கள், அவை அனைத்தும் மன்மோகன் சிங் காலத்தில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டன. நிதிநிலை அறிக்கையில் உள்ள 7.5 விழுக்காடு வளர்ச்சி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், அரவிந்த் சுப்பிரமணியன் கூறியது போல் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

கார்பரேட் வரியை தவிர்த்து நிதிநிலை அறிக்கையில் உள்ள மற்ற விவரங்கள் அனைத்தும் சந்தகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு சீர்திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மற்றொன்று திவால் சட்டமாகும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details