தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் காரத்தே தியாகராஜன், 'உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்திருந்தார். இது இரு கட்சிகளுக்கு இடையே சிறு உரசலை உண்டாக்கியது.
கராத்தே தியாகராஜனை கண்டிக்கும் சிதம்பரம் - சிதம்பரம்
சென்னை: "கராத்தே தியாகராஜனின் கருத்து திமுக - காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவை பாதிக்கிறது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் காரத்தே தியாகராஜன், கட்சிக்கு எதிராகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாகக் கூறி அவரை இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், "கராத்தே தியாகராஜன் அண்மையில் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு அறவே உடன்பாடில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு காரத்தே தியாகராஜனின் கருத்து பாதகமானவை, அவை ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியைச் சந்தித்து தியாகராஜன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை அறிவுறுத்தியுள்ளேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.