நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவது இதுவே முதல்முறையாகும். ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 விழுக்காடு வாக்குகள் பெற்ற நிலையில், கன்சர்வேட்டிவ் தேசிய கட்சி 27 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு, இரண்டு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிலாளர் கட்சி முதன்முறையாக தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது. இதனை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம், முற்போக்கான கருத்துகள் மூலம் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நியூசிலாந்து தேர்தல் நமக்கு உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.