நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடி கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதோடு, பெரு நிறுவனங்களும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி பற்றி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியுள்ளார்.
அதில், '' நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளதை பாஜக அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும்? அவரின் தோல்வி மற்றும் அவரது பொருளாதார மேலாளர்களின் தோல்வி என்பதை பிரதமர் எப்போது ஏற்றுக்கொள்வார்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், ''இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகமுக்கியமான இரண்டு துறைகள் தொலைத்தொடர்பும், விமானப் போக்குவரத்தும். இந்த இரண்டு துறைகளும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பின், மூழ்கும் கப்பல் போல் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, சரிவின் விளிம்பில் உள்ளது. அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை எப்போது உணர்வீர்கள்?