மகாராஷ்டிராவில் விதான் பவன் என்ற இடத்தில் அம்மாநில அரசுக்குச் சொந்தமான உணவகம் இயங்கிவருகிறது. இந்த உணவகத்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும். மிகவும் பிரபலமான இந்த உணவகத்தில் அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வந்து உணவருந்திச் செல்கின்றனர்.
சைவ உணவில் கோழிக்கறித் துண்டு! காணொலி வைரல் - உணவகம்
மும்பை: மகாராஷ்டிராவில் அரசுக்குச் சொந்தமான சைவ உணவகத்தில், ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் கோழிக்கறி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சைவ உணவில் கோழிக்கறித் துண்டு! காணொலி வைரல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3610080-thumbnail-3x2-chicken.jpg)
இந்நிலையில், விதான் பவான் மாநகராட்சி செயலகத்தில் சிறப்பு கணக்காளராக பணிபுரியும் மகேஷ் லகே என்பவர் இந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் இரண்டு கோழிக்கறித் துண்டுகள் இருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அவர் சைவ உணவகத்தில் எவ்வாறு கோழிக்கறித் துண்டு வந்தது என அங்குள்ள பணியாளரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மகராஷ்டிர அரசுக்கு சொந்தமான உணவகம் என்பதால் மகேஷ் லகே அதனை காணொலியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தக் காணொலி வலைதளத்தில் வைரலாகிவருகிறது.