இது குறித்து காவல் காண்காணிப்பாளர் ப்ரஃபுல் தாகூர் பேசுகையில், ''400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் நண்பர்கள். இவர்களின் தலைவன் சந்தோஷ் டாரா. அவரும் ஏற்கனவே ஒடிஸாவில் ரிலையன்ஸ் ட்ரக்கை கடத்தியபோது, 300 கிலோ கஞ்சாவோடு கைது செய்யப்பட்டார்.