தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இடுப்பளவு தண்ணீரில் நீந்தி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்! - education

ராய்ப்பூர்: பல்ராம்பூர் பகுதியில் தினந்தோறும் இடுப்பளவு தண்ணீரில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆபத்தான நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Chhattisgarh

By

Published : Oct 5, 2019, 7:31 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினந்தோறும் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரை நீந்தி செல்லும் நிலை உள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை தோல் மீது சுமந்து சென்று பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதுதொடர்பாக அரசியல்வாதிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் வந்துவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றபின் இப்பகுதிக்கு பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று கிராமமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை நேரங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும். அந்த சமயத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை, இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மாற்று வழி செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - பழங்குடி இனத்தவருக்கு வீடு ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details