ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த 50 ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ மோதலாகும். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்தியா - சீனா இடையே நடைபெற்ற மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குன்ஜும் 2011ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர். இவர், இந்தியா - சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார்.