நாடு முழுவதிலுமிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வரும் அவர்களை தமிமைப்படுத்துவதற்காக அம்மாநில அரசு, பள்ளிக;ள், அரசு கட்டங்களில் 14 நாட்கள் தங்கவைத்து தனிமைப்படுத்தி வருகிறது.
தொடர் மரணங்கள்
அவ்விடங்களில் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் மே 14ஆம் தேதி சரங்கா தனிமைப்படுத்தும் மையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மே 17ஆம் தேதி புனேவிலிருந்து வந்து முங்கிலி பகுதி மையத்தில் தங்கிருந்த ஆண் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். பல்லோத் தனிமைப்படுத்தும் மையத்தில் சூரஜ் யாதவ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.