சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ரோந்து பணியின்போது திடீர் தாக்குதல் - 4 நக்சல்கள் சுட்டுக்கொலை! - சத்திஸ்கரில் பாதுகாப்பு படை தாக்குதல்
ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் பாதுக்காப்புப் படையினர் ரோந்து பணியிலிருந்த போது நடைபெற்ற திடீர் தாக்குதலில், 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள புலாம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினர் ரோந்து பணியிலிருந்த போது, திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு படைக்கும் நக்சலைட்களுக்கும் இடையே நடந்த இந்த மோதலில், 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து A303 துப்பாக்கி, உள்ளூர் ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பெரிய அளவில் மீட்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.