பிரதமர் நரேந்திர மோடிக்கு, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் எழுதியுள்ள கடிதத்தில், “கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் 48 நாள்கள் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பின்நோக்கி செல்லும் மாநில பொருளாதாரத்தை மீட்கும் வகையில் முதல்கட்டமாக அவசரநிதியாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்.
கரோனா முழு அடைப்பு நடவடிக்கை காலங்களில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்துவருகின்றனர். மேலும், கரோனா தொற்று காரணமாக, முழுவதுமாக பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க முடியாத சூழல் உள்ளது.