சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணிபுரியும் ரஜினி குஷ்வாஹா, கரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் 23 பேருக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளார். இது அப்பகுதியினரிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ரஜினி குஷ்வாஹா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "நான் பார்க்கும் வேலை எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. மற்ற சுகாதார மருத்துவ நிலையங்கள் இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் என்னைத் தேடிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.