சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் குஜ்ரா-கோஸ்மராவில் சாலை விபத்தில் நரேந்திர சர்மா (58) என்பவர் படுகாயங்களுடன் கிடந்தார். இது குறித்து அறிந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களான டயமண்ட் நிஷாத், தர்மேந்திர சாஹூ ஆகியோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சாலை விபத்தில் மயங்கியவரை மருத்துவமனையில் சேர்த்த இருவருக்கு பாராட்டு! - தம்தாரி மாவட்டம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலை விபத்தில் மயங்கி விழுந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு, அவரது பணத்தையும் ஒப்படைத்த இருவரை காவல் துறையினர் பாராட்டினர்.
![சாலை விபத்தில் மயங்கியவரை மருத்துவமனையில் சேர்த்த இருவருக்கு பாராட்டு! சாலை விபத்தில் மயங்கிய நபர்: மருத்துவமனையில் சேர்த்த நபர்களுக்கு பாராட்டு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:58:17:1597573697-8439139-943-8439139-1597569317290.jpg)
Accident
மயக்க நிலையில் காணப்பட்ட 58 வயதான நபரின் உயிரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் மற்றும் ஷர்மாவின் இரண்டு மொபைல் போன்களையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நிஷாத், சாஹூ ஆகியோரின் நேர்மையை ஷர்மாவின் குடும்பத்தினர், காவல்துறையினர் பாராட்டினர்.