கரோனா தொற்றால் விவசாயிகள் ஒருபுறம் பாதித்திருக்க மறுபுறம் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் பயிர்களின் மீது தாக்குதலை நடத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகள் மட்டுமில்லாமல் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகள் (DJ) கொண்டு அதனை விரட்டிவருவதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் புகுந்ததால் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.
இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் உத்தரப் பிரதேச மாநில நந்த்கான் வழியாக கவர்தா மாவட்டத்தின் லோஹாரா கிராமத்தின் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகங்களும், விவசாயிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். அதேசமயம் இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதற்காகத் தீயணைப்புப் படையினர் எச்சரிக்கையாக அமர்த்தப்பட்டுள்ளனர்.