சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாவட்டத்தில் காகித ஆலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்தார்.
கரோனா தடுப்பு, முழு அடைப்பு காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக இயங்காமல் இருந்த காகித ஆலை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அப்போது விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஷ வாயு கசிவுகள் ஓரு பார்வை!