சத்திஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டம் கேஸ்லா கிராமத்தைச் சேர்ந்த சகோதர உறவுமுறைக்கொண்ட இரண்டு சிறுமிகள் அவர்களது ஆண் நண்பர்களுடன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளனர்.
அப்போது சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல், அவர்களுடைய நண்பர்களை தாக்கி, இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்புணர்வு செய்து, செல்போனில் அவற்றை பதிவு செய்துள்ளனர்.
இந்தக் காணொலியை அவர்களுடைய நண்பர்கள் பலருக்கு பகிர்ந்ததையடுத்து, அவர்கள் சிறுமிகளை மிரட்டி மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.
இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத சிறுமிகள் அவர்களது பெற்றோர்களிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளனர். பின்னர், சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இன்று இரண்டு சிறுவர்கள் உள்பட சுமார் 11 பேரைக் கைது செய்துள்ளனர்.