மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தின் அந்தக் குறுகிய தெருவிலுள்ள ககன்லாலின் வீடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மரகட்டையில் செய்யப்படும் சீப்பை வாங்க நினைப்பவர்கள் இவரின் வீட்டைத் தேடியே வருவார்கள். இம்மாதிரியான கலைப்பொருள்களுக்கு பிரபலமான அந்த நகரத்தில்தான் ககன்லாலின் வீடு அமைந்துள்ளது.
இம்மாதிரியான சீப்பை செய்பவர்கள் தற்போது ஒரு சிலரே உள்ளனர். அதில் வயது முதிர்ந்த ககன்லாலும் ஒருவர். நாட்டின் ஒரு மூலையிலிருந்துகொண்டு கலையை தொடர்ந்து வளர்த்துவருகிறார். வலிமையில்லா சுருக்கத்துடன் உள்ள அவரின் விரல்கள் சுறுசுறுப்பாக இயங்கி வட இந்திய செம்மரங்களால் சீப்புகளை செய்கிறது.
இது குறித்து ககன்லால், "நெகிழி சீப்புகளைக் காட்டிலும் மரக்கட்டையால் செய்யப்பட்ட சீப்புகளே சிறந்தது. முடி கொட்டுதலை பெரிய அளவில் அது குறைக்கிறது. முடி கொட்டுதலைக் குறைத்து மண்டைக்கு மரக்கட்டை சீப்புகள் மசாஜ் தருகிறது. முடி கொட்டுதலைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் முடி சிக்கையும் குறைக்கிறது" என்றார்.