தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்னை - புதுச்சேரி மெமு ரயில் சேவை தொடக்கம் - about memu train

புதுச்சேரி: சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு முதன்முதலாக இயக்கப்படும் மெமு ரயிலில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்துவருகின்றனர்.

chennai-puducherry-memu-train-started
சென்னை - புதுச்சேரி மெமு ரயில் சேவை தொடக்கம்

By

Published : Dec 14, 2019, 5:31 PM IST

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. அதேபோல் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பயணிகள் ரயில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு தினமும் இயக்கப்படுகிறது. தினசரி காலை 11 மணிக்கு புதுச்சேரி வரும் இந்த ரயில் மீண்டும் புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு மதியம் மூன்று மணிக்கு மேல் புறப்படுகிறது.

மெமு ரயில் தொடக்கம்

இந்த வழித்தடத்தில் இன்று முதல் மெமு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சிறப்பு என்னவென்றால் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கிறது (ஏற்கனவே 10 பெட்டிகள் உள்ளன). அதுமட்டுமின்றி பயணிகள் ரயிலின் உள்ளே இருந்தபடியே அனைத்துப் பெட்டிகளுக்கும்சென்றுவர முடியும். இதில் ரயில் பெட்டிகள் சற்று அகலமாக உயிரி கழிப்பறை (பயோ டாய்லெட்) வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை - புதுச்சேரி மெமு ரயில் சேவை தொடக்கம்

இதையும் படியுங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை! நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details