கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த காவல் துறை அலுவலர்களான ஹரிஷேகரன், பிரகாஷ் ரத்தோட், ஹுமாயூன் நாக்தே ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் காவல் துறையினர் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கி திருட முயற்சி! - bangalore police fake accounts
பெங்களூரு : காவல் துறையினர் பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்குகள் மூலம், சகக் காவலர்களிடம் பேசி பணத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
bang
இந்தக் கணக்குகள் மூலம் பிற காவலர்களுடன் கலந்துரையாடி அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது என்றும் எனவே உடனடியாக இந்த எண்ணுக்கு கூகுள் பே அல்லது பேடிஎம் செய்யுங்கள் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், இந்த குறுஞ்செய்தி குறித்து சந்தேகமடைந்த காவலர்கள், குறிப்பிட்ட அலுவலர்களிடம் நேரில் விஷயத்தைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் செல், குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.