தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்வில் மோசடி செய்வது பெருந்தொற்று போன்று, சமூகத்தை அழித்துவிடும் - டெல்லி உயர் நீதிமன்றம்

தேர்வில் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தேர்வில் மோசடி செய்வது பிளேக் நோய் போன்று, சமூகத்தையும் நாட்டின் கல்வி அமைப்பையும் அழித்துவிடும் என கருத்து தெரிவித்துள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்

By

Published : May 27, 2020, 6:16 PM IST

டெல்லியில் உள்ள தவுலத் ராம் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரத்தில் இறுதியாண்டு படித்துவருபவர் ஆர்ஸூ அகர்வால். இவர் செமஸ்டர் தேர்வில் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவர் தேர்வு எழுத பல்கலைக்கழகம் தடை விதித்தது. இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அகர்வால் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பிரதிபா எம். சிங், தேர்வில் மோசடி செய்வது பிளேக் நோய் போன்று, சமூகத்தையும் நாட்டின் கல்வி அமைப்பையும் அழித்துவிடும் என கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிட்டு அவர்களுக்கு கரிசனம் காண்பித்தால், இது தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் வளர்ச்சிக்கு, தவறிழைக்க வாய்ப்புக் கொடுக்காத நேர்மையான கல்வி அமைப்பே முக்கியம். தேர்வுக்கான கேள்வித்தாளை தயார் செய்பவர்கள் நம்பகத்தன்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மோசடி செய்யக்கூடாது.

தேர்வை கண்காணிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கையில் வைத்திருக்கும் பறக்கும் படையினர் உற்சாகமாக இருக்க வேண்டும். தேர்வு முடிவுகளில் பல்கலைக்கழகமோ கல்லூரியோ தலையிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் கறைபடாமல் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார். இதைத் தொடர்ந்து, அகர்வாலின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளபடி செய்தது.

இதையும் படிங்க: 'மேற்கு வங்கத்தில் கூடுதல் ராணுவம் வேண்டும்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details