இந்துக்களின் மிக முக்கியமான புனித நகரம் கேதார்நாத். இது வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் ஜோதிர்லிங்கமாகக் காட்சிதந்து நமக்கு அருள்பாலிக்கிறார். இமயமலைத் தொடரில் மிக அழகிய இடத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது. உயர்ந்த சிகரங்களும் மந்தாகினி நதியும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
கேதார்நாத் யாத்திரை: 400 கோடி வருவாய் ஈட்டி சாதனை! - Rs 400 crore revenue generated
டேராடூன்: இந்துக்களின் மிக முக்கியமான புனித யாத்திரையான கேதார்நாத் பயணத்தில் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கேதார்நாத் கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 55 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆதி சங்கராச்சாரியரால் 8ஆம் நூற்றாண்டில் இக்கோயில் புனரமைக்கப்பட்டது. அவரது சமாதியும் இங்கு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. சத்திய யுகத்தில் வாழ்ந்த அரசர் கேதாரின் நினைவாக இந்நகரம் கேதார்நாத் என்ற பெயரைப் பெற்றது. மேலும், அவரது மகள் விருந்தா, லக்ஷ்மியின் அவதாரம் என்பதால் கேதார்நாத் நிலம் விருந்தவன் என்ற பெயரைப் பெற்றுள்ளது என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் புனிதத் தலத்துக்கு இந்த ஆண்டு பயணம் செய்த யாத்ரிகர்களின் மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முந்தைய காலங்களில் ஈட்டிய வருவாயைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.