இது குறித்து முகநூல் பக்கத்தில் 'பெண்கள் வளர்ச்சி மேம்பட தீண்டாமை ஒழிய வேண்டும்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
"பெண்கள் வளர்ச்சிகாக 'பேட்டி பச்சோ பேட்டி பதோ' (Beti Bachao Beti Padhao) உள்ளிட்ட நலத்திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தாலும் இன்னும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவைப்படுகிறது.
50 விழுக்காடு பெண்கள் இருக்கக் கூடிய நாட்டில், அவர்கள் பங்களிப்பு அரசியல் உள்பட மற்றத் துறைகளில் குறைவாகவே உள்ளது. இதை களையை பாலினம் வேறுபாடு என்னும் தீண்டாமையை நாம் ஒழிக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் போதிய அளிவு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.