தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புவியைப் புகைப்படமெடுத்த சந்திராயன் 2 - photos

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 2 புவியின் சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக சுற்றிவருவதுடன் புகைப்படமும் எடுத்துள்ளது. இஸ்ரோ நிறுவனம் இப்புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

புவி

By

Published : Aug 5, 2019, 1:56 PM IST

இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 என்ற விண்கலத்தை நிலவை ஆராய்வதற்காக ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. தற்போது சந்திராயன் 2 புவியை வெற்றிகரமாகச் சுற்றிவருவதுடன் புவியைப் புகைப்படம் எடுத்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ’சந்திராயன் 2 புவியின் நான்காவது சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக சுற்றிவருகிறது. சந்திராயன் 2 ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடையும். சந்திராயன் 2இல் பொருத்தப்பட்டிருக்கும் உயர் ரக கேமராவான எல்14 புவியைத் துல்லியமாகப் புகைப்படம் எடுத்துள்ளது.

சந்திராயன் 2 புவியைப் புகைப்படம் எடுப்பது இதுதான் முதல்முறை. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்’ என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details