இஸ்ரோவின் கனவுத் திட்டமாக அறியப்படும் சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15 அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இன்று (ஜூலை 22) மதியம் 2.43 மணி செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.
அதற்கான கவுண்ட்டவுனும் தொடங்கப்பட்டு ஆயத்தப் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டுவந்தது. மேலும் ஒவ்வொரு பணிகள் முடிந்ததும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதுபற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டுவந்தது இஸ்ரோ. இது மக்கள் மத்தியிலிருந்த எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்தது.